- by Editor
- 2 years ago
வடமராட்சியில் மயங்கி வீழ்ந்த உடற்கல்வி ஆசிரியர் மரணம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம், வடமராட்சியில் திடீரென மயங்கி வீழ்ந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தணிகைவேல் (வயது 47) என்பவரே உயிரிழந்தார்.
வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனமுற்று மயங்கி வீழ்ந்த நிலையில், அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.