- by Editor
- 1 year ago
நடுக்கடலில் 2 நாட்கள் தத்தளிப்பு - முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு -
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்கள் இன்று (04) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து முன்தினம் (02) காலை 10 மணியளவில் குறித்த இருவரும் படகில் கடலுக்கு சென்றிருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த நேரத்திற்குள் கரைக்கு திரும்பாததால், அந்தப் பகுதி மீனவர்கள் தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.
தேடுதல் முயற்சிகள் ஆரம்பத்தில் பலனளிக்காததால், சம்பவம் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாகவும் இன்று தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், குறித்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறால் செயலிழந்தது தெரியவந்தது. இதனால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.