- by Editor
- 2 years ago
ரோஹிங்கியர்களை அரசு என்ன செய்யும்? அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த பதில்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றைக் கருத்தில்கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:-
"புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றோம்.
தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானத்தைக் கருதியே உரிய முடிவெடுக்கப்படும்." - என்றார்.