- by Editor
- 1 year ago
இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பல் இலங்கைக்கு விஜயம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இன்று இலங்கைக்கு வரவுள்ளது.
மூன்று நாள்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைவரும் இந்தக் கப்பலுக்குக் கொழும்பு துறைமுகத்தில் தமது சம்பிரதாய முறைப்படி வரவேற்பதற்கு இலங்கை கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, மேற்படி கப்பல் 2001 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஐ.என்.எஸ். மும்பை கப்பலானது இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்திற்கான அத்தியாவசிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.