- by Editor
- 4 months ago
போலி வீரர்களை உருவாக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"மொழிவாதம், மதவாதம், இனவாதம் அடிப்படையில் போலித்தனமான வீரர்களை உருவாக்கும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 141 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, விசுமடு பாரதி மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களைப் பெறுவதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியையும் எதிர்க்கட்சித் தலைவர் வழங்கி வைத்தார்.
அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
"சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கல்வியின் மூலம் பதில் வழங்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய சமூகத்தில் அண்மைக்காலம் வரை இனம், மதம், சாதி, குலம் என்ற அடிப்படையில் சிங்களவர், தமிழ், முஸ்லிம், பர்கர் என இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்து வந்தன. சமூகம் பிளவுபட்டுள்ள இவ்வேளையில், பிளவுபட்ட சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு கல்வியே சிறந்த வழியாகும் என நம்புகின்றேன். மொழிவாதம், மதவாதம், இனவாதம் அடிப்படையில் போலித்தனமான வீரர்களை உருவாக்கும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
ஒரு நாடாக நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாலும், நாம் பெற வேண்டிய சமாதானத்தின் பலன்களை எம்மால் பெற முடியாது போயுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தலைவர்கள் போருக்குப் பிந்திய சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்யவில்லை. இதன் காரணமாக வடக்கு, கிழக்கை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பொறாமைத்தன நாடகத்தால் வடக்கு, கிழக்கில் போரின் பின்னர் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கை மையப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை கூட்டி, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும்." - என்றார்.