- by Editor
- 1 year ago
U19 மகளிர் டி20 ஆசியக் கிண்ணம்: உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
மகளிர் கிரிக்கெட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில், ஆசிய கிரிக்கட் சபை, மகளிர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ணத்தினை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமையச் சர்வதேச கிரிக்கெட் பேரவை, 19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் மகளிர் ஆசியக் கிண்ண போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மகளிர் கிரிக்கட் ஆட்டக்காரர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்கான அனுபவத்தையும் தயார் நிலையையும் பெற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், பிராந்தியத்தில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதுடன் பிரபலமாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.