- by Editor
- 2 years ago
வடக்கு தனியார் பஸ் உரிமையாளா்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளா்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தவிசாளர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்றைய கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு இன்று முதல் வழமை போன்று பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.