Thursday, October 8, 2026

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் - தலைவர் விஜய்!


முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் - தலைவர் விஜய்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

2026 தேர்தல் மற்றும் தமிழக வெற்றி கழக கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like