Sunday, October 4, 2026

கார் பந்தயத்தில் விபத்து; 7 பேர் பரிதாப உயிரிழப்பு!!


தியத்தலாவை கார் பந்தயத் திடலில் நேற்று மாலை கோர விபத்தில் 7 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2024 கார் பந்தயப் போட்டியில் பங்கேற்ற கார் ஒன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர், போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த 23 பேரும் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like