Sunday, October 4, 2026

ஓட்டோச் சாரதி குத்திக்கொலை: இருவர் கைது!


குருந்துவத்தை - வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக ஓட்டோச் சாரதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இந்த கொலையினை மேற்கொண்ட பின்னர் ஓட்டோவுடன் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் மூவரில் இருவர் திருடப்பட்ட ஓட்டோவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் பிரதான சந்தேகநபரும் அடங்குகின்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய கத்தி மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவில் கைப்பேசி ஒன்றை திருடுவதற்காக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொடகவெல பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் கைப்பேசியை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

you may also like