- by Editor
- 1 year ago
ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது
-
- by Editor,
- 7 months ago
- in உலக செய்திகள்
ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் பெல்லார்மைன் சட்டுங்கா முகாபே (வயது 28) தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பேர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அவர் தென்னாப்பிரிக்க பொலிஸாரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஜோகன்னஸ்பேர்க்கில் அமைந்துள்ள முகாபேயின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது
அந்த வீட்டில் பணிபுரிந்த 23 வயது இளைஞரே துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், கொலை முயற்சி வழக்காக இதைக் கருதி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ரொபர்ட் முகாபே ஸிம்பாப்வேயை 37 ஆண்டுகள் ஆட்சி செய்தவராவார்.
2017 இல் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். பின்னர் 2019 ல் தனது 95 ஆவது வயதில் காலமானார்.