- by Editor
- 4 months ago
வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு சுமந்திரன் இன்று விஜயம்
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அங்கு இருந்த பிள்ளையார் கோயிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் புத்தர் சிலையையும் பார்வையிட்டிருந்தார். அவருடன் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் சென்றிருந்தார்.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அதனை ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டதுடன் குறித்த ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய திருமதி. கோகிலரமணியுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்தக் காணியில் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதனை நிறுத்தக் கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட தொடர்புடைய பல கோரிக்கைகள் இந்தக் காணியின் சட்டபூர்வ உரிமையாளரும் பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணியால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வழக்காளி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.
இந்த வழக்கானது குறித்த பகுதியில் இருந்து சற்று தொலையில் வழங்கப்படுகின்ற 10 பேர்ச் காணியில் பிள்ளையார் கோயிலைக் கட்டி பிள்ளையார் சிலையை அமைக்கலாம் என்ற நிபந்தனை உள்ளடங்கலாக 6 நிபந்தனைகளுடன் 19.03.2021 அன்று இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.