- by Editor
- 1 year ago
பணயக் கைதிகள் வீடு திரும்புவதற்கு இந்தியர்கள் விளக்கேற்றி வழிபடுங்கள்: இஸ்ரேல் தூதர் வேண்டுகோள்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள இஸ்ரேல் பணயக் கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,100 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலியர்கள் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அவர்களை தேடும் பணியில் இஸ்ரேல் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காசா மீதான தாக்குதலை நிறுத்தினால், பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், காசா நகரில் தரை வழி தாக்குதல் நடத்தி அந்த நகரை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக கான இஸ்ரேல் தூதர் நார் கிலான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள காணொலி செய்தியில், பகவான் ராமர் ராவண வதத்துக்குப் பின்னர் நாடு திரும்பியதை ஒவ்வொரு தீபாவளியன்றும் மக்கள் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர்.
அதுபோல் இந்த தீபாவளிக்கு, இஸ்ரேல் பிணைக் கைதிகளும் நாடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.