Friday, October 9, 2026

யாழ் மாநகர சபை அமர்வில் கடும் குழப்பம்!


யாழ் மாநகர சபை அமர்வில் கடும் குழப்பம்!

யாழ். மாநகர சபையில் இன்றையதினம் (27.06.2025) நடைபெற்ற மாநகர சபை அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (27)விசேட அமர்வுக்காக கடந்த 23 ஆம் திகதியன்று திகதியிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது.

முதல்வர் மதிவதனி தலைமையில் ஆரம்பமான சபையின் விசேட அமர்வில், சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றன்மை குறிப்பிடத்தக்கது.


you may also like