- by Editor
- 2 years ago
தேசியக் கொடியை அவமதித்த ரோஹித் சர்மா!
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
9 ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி கிண்ணத்தைச் சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா பார்படாஸ் மைதானத்தில் இந்தியத் தேசியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரொபைல் படமாகப் பதிவேற்றியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாகக் கூறி அவரின் ப்ரொபைல் படத்தைப் பகிர்ந்து இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1,971 பிரிவு 2 இன்படி, தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்க விடக் கூடாது.
ஆனால் ரோஹித் சர்மா மண் தரையில் தேசியக் கொடியை நட்டு வைத்து அவமதித்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.