- by Editor
- 2 weeks ago
யோஷித, டேசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மகனான யோஷித ராஜபக் ஷ மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நிதித் தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
500 லட்ச ரூபாவுக்கும் அதிக தொகைக்கு இரத்மலானை சிறிமல் உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் காணி உள்ளிட்ட சொத்துக்களை கொள்வனவு செய்தமை தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யோஷித ராஜபக் ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சிறிமல் உயனவிலுள்ள 34 தசம் 5 பேர்ச்சஸ் காணியை 360 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகையைப் பயன்படுத்தி கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.