- by Editor
- 2 years ago
மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜயின் பிரசாரம் தொடக்கம்!
-
- by Editor,
- 1 week ago
- in இந்திய செய்திகள்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி இடம்பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னையிலிருந்து சாலை வழியாக மதுராந்தகம் வந்தடைந்த முதல்வர் விஜய், பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வழியில் அவர் சாலைவலம் மேற்கொண்டு ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டரங்குக்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து, பிரசார வாகனத்துக்கு வந்த முதல்வர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 பொலிஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.