- by Editor
- 1 week ago
பாடசாலைச் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி ; அதிபர் மீது தாக்குதல்!
கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் சுவர் சரிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பாடசாலை அதிபர் மீது பிரதேச வாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த பாடசாலை அதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னைய செய்தி
கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் சுவர் சரிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தரம் ஒன்றில் கல்வி பயிலும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நான்கு மாணவர்களும், இரு மாணவிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.