- by Editor
- 1 month ago
வவுனியா நகர் முழுவதும் தேசியக் கொடிகள்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தை இன்று கரிநாளாக அனுஷ்டித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா ஏ - 9 வீதியின் இரு பகுதிகளிலும் மணிக்கூட்டுக் கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டார வன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் சுதந்திர தினமான இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இவ்வாறு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.