Saturday, October 10, 2026

காலியில் மனைவியைக் கழுத்தறுத்து கொடூரமாக படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்


காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்த விவரம்

இக்கொலைச் சம்பவத்தில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவரே உயிரிழந்துள்ளார். கொலையைச் செய்தவர் உயிரிழந்த பெண்ணின் சட்ட ரீதியான கணவரான 34 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொலைக்கான காரணம்

உயிரிழந்த பெண், தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றுமொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரிலேயே இந்தக் கொடூரக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியைக் கொலை செய்த சந்தேகநபர், அவரது தலையைத் துண்டித்து, வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள - குறித்த பெண்ணுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வீசியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரணடைவும்

விசாரணையும்

இக்கொடூரச் செயலைச் செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் இன்று காலை நெலுவ பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர் உடுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



you may also like