Friday, October 9, 2026

நடிகர் விநாயகன் கேரளாவில் கைது!


'ஜெயிலர்' திரைப்படத்தின் வில்லன் நடிகர் விநாயகனை கேரள பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில்பொலிஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஒகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். 'வர்மன்' என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழில் 'திமிரு', 'மரியான்' போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான 'கம்மாட்டிப்பாடம்' படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் அவர் ஆஜரானார். அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். இதன்போது அவர் பொலிஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது அவர் மது போதையில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனை பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். அத்துடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

you may also like