Saturday, October 10, 2026

தபால் வாக்களிப்பு விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு


ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 5 ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

you may also like