- by Editor
- 2 years ago
மஸ்க் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும் - ட்ரம்ப் எச்சரிக்கை!
மஸ்க் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும் - ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்புக்களை தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, புதிய கட்சியை தொடங்குவேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ட்ரம்ப் தனது சமூக ஊடக பதிவில்,
"ஜனாதிபதி தேர்தலில் எலான் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார். ஆனால் EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை இரத்து செய்ய வேண்டும். என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன். இது எலான் மஸ்க்கிற்கும் தெரியும்.
வரலாற்றில் காணப்படும் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் எலான் மஸ்க் தென்னாபிரிக்காவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.