Wednesday, October 7, 2026

'பட்ஜட்' இன்று முன்வைப்பு நாளை விவாதம் ஆரம்பம்


2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவு - செலவுத் திட்ட உரை/ வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான முழுமையான விவாதம் (வரவு - செலவுத் திட்ட விவாதம்) நாளை (நவம்பர் 8 ஆம் திகதி) தொடக்கம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நாளை 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் 14 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.


you may also like