Tuesday, October 6, 2026

மாமனிதர் கிட்டினர் சிவநேசனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்!


மாமனிதர் கிட்டினர் சிவநேசனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் யாழ்ப்பாண தலைமைக் அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கபட்டது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றபட்டு மலர்மலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

you may also like