Wednesday, October 7, 2026

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ரணிலுக்கு அறுவைச் சிகிச்சை!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்க தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

"முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்." - என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போது சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இந்தச் சிகிச்சையைப் பெற்றுள்ளார் என்று தெரியவருகின்றது.

சிகிச்சையின் பின்னர் அவர் தற்போது ஓய்வெடுத்து வருகின்றார் என்றும், அவரது உடல்நிலை சீராக இருக்கின்றது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த இந்தத் தகவல் அரசியல் தளத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

you may also like