- by Editor
- 10 months ago
எல்லை தாண்டி செல்ல வேண்டாம்; தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
-
- by Editor,
- 1 year ago
- in இந்திய செய்திகள்
இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27ஆம் திகதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் பி 475, பி 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என இலங்கை கடற்படையினர் சார்பில் யாழ்ப்பாண மீனவ சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் இந்த விடயங்களை உள்ளடக்கி செய்தி வெளியிட்டுள்ளன.