Sunday, October 11, 2026

சுவிட்ச் பரிசோதனை செய்துவிட்டோம் - எயார் இந்​தியா அதி​காரி தெரிவிப்பு!


சுவிட்ச் பரிசோதனை செய்துவிட்டோம் - எயார் இந்​தியா அதி​காரி தெரிவிப்பு!

இந்தியாவின் குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஜூலை 12ஆம் திகதியன்று எயார் இந்​தியா விமானம் பாரிய விபத்​துக்​குள்​ளானது. அவ் விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தமை பரிசோதனைகளின் போது தெரிய​வந்​தது.

இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ‘‘அனைத்து போயிங் விமானங்​களி​லும் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் அமைப்​பு​களை ஆய்வு செய்​து​விட்​டோம். இதில் எந்​தப் பிரச்​சினை​யும் கண்​டறியப்​பட​வில்​லை’’ என எயார் இந்​தியா அதி​காரி தெரி​வித்​துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like