Wednesday, October 7, 2026

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள்தண்டனை


தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீது அவர் பதற்றத்தைத் தூண்டியதாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2024இல் இராணுவச் சட்டத்தை அறிவித்ததால் நாட்டில் பதற்றத்தைத் தூண்டிய குற்றச்சாட்டை திரு யூன் எதிர்நோக்குகிறார்.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் வாதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் கடந்த 30 ஆண்டில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

you may also like