- by Editor
- 11 months ago
உத்தேச சமாதான ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகள் பேச்சு
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே உத்தேச சமாதான ஒப்பந்தம் குறித்து சவூதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில் உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பிறிதொரு சமாதான பேச்சு வார்த்தை புரிந்துணர்வுடன் இடம்பெறுவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு வார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரஷ்யா தொடர்ந்தும் ஆளில்லா வானூர்தி மூலம் வான் தாக்குதலை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ரஷ்ய கிவ்வை குறிவைத்து மேற்கொண்ட வான் தாக்குதலில் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் பதில் தாக்குதலில் 4 இராணுவ உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டன என உக்ரைனிய இராணுவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.