Thursday, October 8, 2026

பளையில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் சாவு!!


கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பளை வடக்கைச் சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.50 மணியளவில்

இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த லொறியும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் தொடர்புடைய லொறியின் சாரதி பளை பொலிஸாரால்

கைது செய்யப்பட்டுள்ளார்.

you may also like