Friday, October 9, 2026

களனி ஆற்றில் திடிர் வெள்ளப்பெருக்கு அபாயம்


களனி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலை (19) பதிவான தரவுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணி நேரத்தில் பூகொட பகுதியில் களனி ஆற்றின் நீர்மட்டம் பல அடி உயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதைக் கருத்தில் கொண்டு, களனி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், நிலவும் காலநிலை மற்றும் நீர்மட்டச் சூழலைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

you may also like