Saturday, October 10, 2026

அமெரிக்க செனட் முடிவுக்கு டிரம்ப் கடும் விமர்சனம்


ஈரான் தற்போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் நிலையில், அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், தனது முயற்சிகளுக்கு தடையாக செயல்படுகின்ற வகையில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்த நான்கு குடியரசுக் கட்சி செனட்டர்களை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களின் இந்த நடவடிக்கை ஈரானுக்கு சாதகமாக அமையக்கூடும் என்றும், இது நாட்டின் எதிரிக்கு ஆதரவளிப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், இந்த அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் இந்த விவகாரத்தை வெற்றிகரமாக சமாளித்து முடிப்பேன் என டிரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார்.


you may also like