Saturday, October 10, 2026

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்


நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் (இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம்) 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினமும், நேற்றும் விவாதம் நடைபெற்றது.

நேற்றைய விவாதத்தின் பின்னர் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அவையும் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

இந்தச் சட்டமூலத்துக்கு எதிரணியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


you may also like