- by Editor
- 2 years ago
விமான விபத்தில் பலியானார் அமெரிக்க விண்வெளி வீரர்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
அமெரிக்கா பிரபல விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் தனது 90 ஆவது வயதில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வில்லியம் ஆண்டர்ஸ் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார்.
அதுமட்டுமன்றி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் வர்ணப் புகைப்படமான எர்த்ரைஸ் புகைப்படத்தை இவரே எடுத்துள்ளார்.
இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் , தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வொஷிங்டனில் இருந்து புறப்பட்டபோது பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்துள்ளார் என கூறப்படும் நிலையில் அவரது உடலை மீட்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.