- by Editor
- 3 weeks ago
அநுராதபுரம், மிஹிந்தலை செல்லும் பக்தர்களுக்கு ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி தினம் ஜூன் 29ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி அதிகளவிலான பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தற்போது வழமையாக இயக்கப்படும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜூன் 27ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதுடன், பக்தர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட ரயில்களின் நேர அட்டவணை மற்றும் சேவை விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.