Saturday, October 10, 2026

வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைவு - இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர்


இலங்கையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில பிரபலமான கார் மாடல்களின் விலைகள் சில சந்தர்ப்பங்களில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களின் விலைகள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் பெரியளவில் விலை குறைவுகள் ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய விலை நிலவரம் நுகர்வோருக்கு நல்ல வாய்ப்பாகும். சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும்,” என இந்திகா சம்பத் மெரிஞ்சிகே மேலும் தெரிவித்துள்ளார்.

you may also like