Saturday, October 10, 2026

லொறி - ஓட்டோ மோதி ஒருவர் பரிதாப மரணம் - மூவர் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மூவர் காயமடைந்துள்ளனர் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஓட்டோவில் பணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்இ விபத்துக்குள்ளான வாகனங்களையும்இ மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

you may also like