Monday, October 12, 2026

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியீடு


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை தவணை கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2027ஆம் கல்வியாண்டுக்கான தவணை ஆரம்ப மற்றும் நிறைவுத் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, 2027ஆம் கல்வியாண்டு ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனித்தனியான தவணை கால ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகள் மற்றும் பாடசாலை விடுமுறைகளையும் கருத்திற்கொண்டு இந்த தவணை கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027ஆம் ஆண்டுக்குப் பொருந்தக்கூடிய அரசாங்க விடுமுறை தினங்களின் பட்டியலையும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


you may also like