- by Editor
- 4 months ago
காசாவில் போர் நிறுத்தம் தேவை; ஐ.நா. செயலாளர் வலியுறுத்தல்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
குவைத்தில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் தேவை. அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளில் உடனடி எழுச்சிக்கான எனது அழைப்பு மற்றும் உலகின் அழைப்பை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
போர் நிறுத்தம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இந்தப் போரின் பேரழிவுகள் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலங்கள் தேவைப்படும்.” - என்றார்.