Wednesday, October 7, 2026

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பெரிய மோசடி - மொபைல் ஆப் மூலம் வங்கி கணக்குகள் காலி


ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பெரிய அளவில் நிதி மோசடி நடைபெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ்அப் மூலம் அந்த நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், மூன்று போலி இணையதளங்களின் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய தூண்டுகின்றனர்.

இந்த செயலி ஒரு அபாயகரமான ‘பேங்கிங் ட்ரோஜன்’ மென்பொருளாகும். இதை நிறுவும் உடன், கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மோசடியாளர்கள் பெறுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம்,

தனிப்பட்ட ரகசிய தகவல்கள் திருடப்படுகின்றன

வங்கி கணக்கு விபரங்கள் களவாடப்படுகின்றன

ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP) கைப்பற்றப்படுகின்றன

இறுதியில் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுகிறது

இந்த மோசடிக்காக பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன:

077 45 58 361, 011 77 71 979, 074 11 42 208, 077 57 91 209, 074 32 68 200

⚠️ உடனடி பண இலாபம் என்ற பேராசையில் இத்தகைய இணைப்புகள் அல்லது செயலிகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

you may also like