Thursday, October 8, 2026

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இண்டியானாபோலிஸில் பதற்றம்


அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் தீடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவமானது, மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே நடத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.

அத்தோடு, தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் பெருநகர பொலிஸ் துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்துள்ளார்.   

you may also like