- by Editor
- 1 year ago
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தலைவர் கு.மகாலிங்கம் தலமையில் நேற்று ஊடக இல்லத்தில் இடம் பெற்றது.
இதில் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான நிதி பங்களிப்பு செய்த புலம்பெயர் உறவான ப. தேவநாயகம் மற்றும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு.மகாலிங்கம் ஆகியோர் உபகரணங்களை வழங்கிவைத்தனர். ஒவ்வொருவருக்கும் ரூபா 3500 ரூபா பெறுமதியான புத்கப்பை மற்றும் அப்பியாசக் கொப்பி என்பனவே வழங்கிவைக்கப்பட்டன.
அப்பியாசக் கொப்பிகளுக்கான நிதி பங்களிப்பை குடத்தனை இளைஞர்கள் ஒன்றியம் வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், நிதி வழங்குநர் பா. தேவநாயகம், யாழ் வடமராட்சி ஊடக இல்ல உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.