Wednesday, October 7, 2026

ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹரா 25 ஆம் திகதி ஆரம்பம்!


ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹரா 25 ஆம் திகதி ஆரம்பம்!

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, இந்த ஆண்டு பெரஹரா இம்மாதம் 25 ஆம் திகதி கப் நட்டல் நிகழ்வுடன் ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கும்பல் பெரஹரா மற்றும் ரந்தோலி பெரஹரா இம்மாதம் 30 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு வீதிகளில் ஊர்வலமாக வலம் வர உள்ளன.

இதற்கிடையில், பெரஹெராவிற்கு போதுமான யானைகள் இல்லாதது பிரச்சினையாக மாறியுள்ளது என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

- அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலாசாரத்தின் பாரம்பரிய விழாவிற்கு யானைகள் பற்றாக்குறை ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. தற்போது உயிருடன் உள்ள 91 வளர்ப்பு யானைகளில் 8 யானைகள் மட்டுமே 35 வயதுக்குட்பட்டவை மற்ற யானைகள் அனைத்தும் 60 வயதிற்கு மேற்பட்டவை எனவும் நிலங்க தேலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் யானைகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் எசல பெரஹெராவை நடத்த வெறும் 8 யானைகளே இருக்கும் என்றும் அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

you may also like