- by Editor
- 1 year ago
“ஒவ்வொரு டொலரும் முக்கியம்” -ஆடம்பர வாகனங்களுக்கு எதிர்ப்பு
-
- by Editor,
- 7 months ago
- in இலங்கை செய்திகள்
எமது நாடு தற்போது அந்நியச் செலாவணியையும், நாட்டுக்கு கிடைக்கும் ஒவ்வொரு அமெரிக்க டொலரையும் மிகுந்த கவனத்துடன் சேமிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது என பொருளாதார நிபுணர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தவறானது எனத் தெரிவித்துள்ளார். “நாம் தற்போது அந்நியச் செலாவணியை அதிகமாகச் சேமிக்க வேண்டிய அவசர நிலைமையில் இருக்கின்றோம். நாட்டுக்கு கிடைக்கும் ஒவ்வொரு டொலரும் மிகவும் மதிப்புமிக்கது,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் பல அதிர்ச்சிகரமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதால், உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். உற்பத்தி அதிகரிக்க தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பொதுப் போக்குவரத்திற்கான அவசரத் தேவைகள் இருந்தால், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்றார்.
ஆனால், நாட்டின் பணக்காரர்களுக்காக ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்றதல்ல என அகிலன் கதிர்காமர் வலியுறுத்தினார்.