Wednesday, October 7, 2026

தாய்லாந்தின் புதிய பிரதமர் நியமனம் இன்று


தாய்லாந்தின் புதிய பிரதமர் இன்று நியமிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பாராளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நேற்று முன்தினம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவினூடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

you may also like