- by Editor
- 2 years ago
அவசரமாகத் தரையிறக்கப்பட்டது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமொன்று மெல்பேர்ன் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், பொறியியலாளர்கள் குழுவொன்று விமானத்தை ஆராய்ந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.