- by Editor
- 1 year ago
கடல் அலைகள் 3 மீற்றர் வரை உயரக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்துடன் கடற்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையான வெப்பச் சுட்டெண் அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் அலைகள் மற்றும் வெப்பமான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல்கள் நாளை (31) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.