Friday, October 9, 2026

பஸ் விபத்தில் குழந்தை உட்பட 21 பேர் காயம்


புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கடை மற்றும் மரம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில், பஸ்ஸில் பயணித்த பயணிகள் மற்றும் கடையில் இருந்த குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தல் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like