Friday, October 9, 2026

நடிகர் அல்லு அர்ஜுன் கைது!


நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திரைப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்வையிட நடிகர் அல்லு அர்ஜுன், கடந்த 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்றிருந்தார்.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் சென்றதால், அவரை காண்பதற்கு இரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதே நேரத்தில் அவரது 8 வயது மகனும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்கு நிர்வாகம் மீது பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருகை தருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.


you may also like